அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

Published On :

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

முன்னாள் அமைச்சரும் திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா (101-வது பிறந்தநாள்) இன்று (டிச.19) கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து திமுக சார்பிலும் அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இதையொட்டி, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் சென்னை அறிவாலயத்தில் உள்ள அன்பழகனின் திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினார். திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.