பரந்தூர் விமான நிலையம்: கிராம உரிமை மீட்பு பேரணி தடுத்து நிறுத்தம்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய கிராம உரிமை மீட்பு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.
பரந்தூர் விமான நிலையம்: கிராம உரிமை மீட்பு பேரணி தடுத்து நிறுத்தம்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய கிராம உரிமை மீட்பு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் இரண்டாவது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து 146 வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஏகனாபுரம் கிராமத்திலிருந்து விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நிலம் எடுப்பு பணிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 2000 பேர் கிராம உரிமை மீட்பு பேரணியை  நடத்தினார்கள்.

ஏகனாபுரம் கிராமத்தில்  இருந்து துவங்கிய பேரணி 500 மீட்டர் தூரத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

தடுத்து நிறுத்தப்பட்ட கிராம மக்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி,  ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி நாளை தலைமைச் செயலகத்தில் துறை அமைச்சருடன் சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் கவலையுடன் பேரணியை கைவிட்டு கலைந்து சென்றனர். 

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.

விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிடாவிட்டால், மிகப்பெரிய தற்கொலை போராட்டம் கூட நடைபெறும் என கிராம பெண்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

கிராம மக்களின் பேரணியை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com