சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் விளையாட்டு மையம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் விளையாட்டு மையம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்
Updated on
2 min read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.12.2022) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தேனாம்பேட்டை மண்டலம், பகுதி-27, வார்டு-116க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, ராயபுரம் மண்டலம், வார்டு-62க்குட்பட்ட பம்பிங்ஸ்டேசன் சாலை மற்றும் ரிச்சி தெரு சந்திப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிவறையினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

மேலும், வார்டு-62ல் சுயம் Initiative என்ற திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்டுள்ள 'நம்ம சந்தை' கடையை திறந்துவைத்தார். இந்த நம்ம சந்தை கடையில் Zero Waste இலக்கை குறிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நம்ம சந்தை கடையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சொந்தமாக பை மற்றும் பாத்திரங்களை கொண்டு வந்து ரூ.50-க்கு மேல் பொருட்களை வாங்கிச் செல்லும் நபர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், பயன்படுத்திய பால் பாக்கெட்டுகள், லேஸ் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகளை சேகரித்து, சுத்தப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு 10 பாக்கெட்டுகளுக்கு தலா 5 சதவீதம் தள்ளுபடியும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை சுத்தப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு இரண்டு பாட்டில்களுக்கு ரூ.1-ம் வழங்கப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா முதன்மைச்செயலாளர்/ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு மண்டலக்குழுத் தலைவர்கள் .எஸ்.மதன்மோகன் பி.ஶ்ரீராமுலு மாமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.பி.எம். காமராஜ், ரா.ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர், திமுக அரசில் புத்துணர்வு பெற்றுள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி மற்றும் தனது பெயரிலான அறக்கட்டளை உதவியுடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பம்பிங் ஸ்டேசன்-ரிச்சி தெரு சந்திப்பில், ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆண்-பெண்-குழந்தைகளுக்கான கழிப்பிடங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com