காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிறிஸ்துமஸ்: 400 கிலோ எடையில் பூதம் உருவத்திலான சாக்லேட்! (விடியோ)

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள 400 கிலோ எடையில் பூதம் உருவத்திலான சாக்லேட்  சிற்பத்தை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

News image
Updated On :21 டிசம்பர் 2022, 9:03 am

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள 400 கிலோ எடையில் பூதம் உருவத்திலான சாக்லேட் சிற்பத்தை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

சுற்றுலா நகரமான புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் சாக்லேட் மூலம் தலைவர்களின் உருவம் செய்து அவ்வப்போது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களை சாக்லேட் கொண்டு வடிவமைத்துள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ் நெருங்கும் நிலையில் அற்புத விளக்கை கையில் வைத்திருக்கும் பூதம் வடிவிலான சாக்லேட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சிற்பம் 5 அடி உயரத்தில் 400 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை செப் ராஜேந்திரன் தங்கராசு என்பவர் 182 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளார். இது அடர் பழுப்பு மற்றும் வெள்ளை நிற சாக்லேட் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த சாக்லேட் பூதத்தை  ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சிலர் அதன் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.