
கோப்புப் படம்
சீனா, ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு கரோனா பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத் துறைக்கு மாநில சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.
சீனாவில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில சுகாதாரத் துறை இந்த கடிதத்தை எழுதியுள்ளது.
இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில்,
மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
படிக்க | இந்தியாவில் 4 பேருக்கு, சீனாவில் பரவும் புதிய வகை கரோனா!
சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
கரோனா பரிசோதனை மாதிரிகளில் கரோனா இருப்பது உறுதியானால் அவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.
மேலும், கரோனா பரிசோதனைக்கு உரிய வழிகாட்டுதல் முறைகளை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் மாநில அரசு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற இரண்டு திரிபு வகை கரோனா இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.