ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட முதல்வர் ஸ்டாலின் கான்வாய்! வைரல் விடியோ
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்றிரவு ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சென்னை கோபாலபுரத்தில் இருந்து தனது வீட்டிற்கு நேற்று இரவு 8.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது.
இதனைக் கண்ட முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை முதல்வரின் வாகனத்திற்கு முன்பு சென்ற பாதுகாப்பு வாகனத்தில் இருந்து விடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
தற்போது இந்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக, கடந்த மாதம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரசாரத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தச் சொல்லி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.