
புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரபத்துக் கழகம் திவிர்த்து இதர கோட் டங்களுக்கும் சேர்த்து ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதில், கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையும் படிக்க | ஓபிஎஸ்ஸை ஆதரிப்பது ஏன்? பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒரு பேருந்து ரூ.42 லட்சம் என்ற மதிப்பீட்டில், பிஎஸ்-5 வகை டீசல் பேருந்துகளை வாங்குவதற்கும், இதில் 60 சதவீதம் பேருந்துகளை நகரப் பகுதிகளிலும், 40 சதவீதம் தொலைதூர பேருந்து சேவைக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.