அரையாண்டு விடுமுறை: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உத்தரவை பிறப்பித்த பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படும் காலத்தில் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உத்தரவை பிறப்பித்த பள்ளிக்கல்வித் துறை
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உத்தரவை பிறப்பித்த பள்ளிக்கல்வித் துறை


சென்னை: தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படும் காலத்தில் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படவிருக்கும் நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், அரையாண்டு விடுமுறைக் காலத்தில், பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் போன்று அசைன்மென்ட்களை மட்டும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை.. விடுமுறை..
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு டிச. 24 முதல் ஜன. 1-ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தோ்வு கடந்த டிச.16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்று வந்தது.

பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்தத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், நிகழாண்டு விடைத்தாள்களை விரைவாக திருத்தி வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அரையாண்டுத் தோ்வுகள் அனைத்தும் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அதன்பின், மாணவா்களுக்கு தோ்வுக்கான விடுமுறை வழங்கப்படுகிறது.  அதன்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு டிச. 24 முதல் ஜன.1-ஆம் தேதி வரை 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுப்பு முடிந்து ஜன. 2 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இந்த விடுமுறை நாள்களில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com