
எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவுநாள் இன்று (டிச.24) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
படிக்க | பெரியார் நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்துள்ளதால், பழனிசாமி அணியினர் தனியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.