ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் ஐந்தாவது நாளான செவ்வாய்க்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் பாண்டியன் கொண்டை, ரத்தின காது காப்பு, புஜ கீர்த்தி, விமான பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள் காட்சியளித்தார்.

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பெருவிழா 2022-23 கல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் இன்று நம்பெருமாள், அரங்கனையன்றி மற்று தெய்வம் அறியா தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்க, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, ஸ்ரீரங்க விமான பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபயநாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவாரபாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது) அடுக்கு பதக்கங்கள், சிகப்புக்கல் அபயஹஸ்தத்துடன், பச்சைவர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்து சரம் சாற்றி, பின் சேவையாக - அண்டபேரண்ட பக்க்ஷிபதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி, காட்சியளித்தார்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவில் திங்கள்கிழமை வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பகல்பத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நம்பெருமாளை தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், பகல்பத்து முதல் நாளான 23ஆம்தேதி 32,261 பேரும், இரண்டாம் நாளான 24 -ஆம் தேதி 53,149 பேரும், மூன்றாம் நாளான 25 ஆம் தேதி 56,633 பேரும், நான்காம் நாளான திங்கள்கிழமை இரவு 7 மணி வரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: பார்சலில் வந்த மிக்ஸி வெடித்து ஒருவர் காயம்
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


