துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கரோனா: புதிய வகை தொற்றா?

துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை தொற்றா எனக் கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை தொற்றா எனக் கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் துபையிலிருந்து சென்னை வந்த 2 பயணிகளுக்கு இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பயணிகள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பரிசோதனை மாதிரிகள் மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதிய பிஎஃப் 7 வகை கரோனா தொற்றா  என்பதைப் பரிசோதிப்பதற்காக அவர்களின் சோதனை மாதிரிகள் மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

முன்னதாக, சீனாவிலிருந்து மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்று பரவி வருகிறது.

தில்லி விமான நிலையத்தில் கடந்த வாரம் 4 சர்வதேச பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் சர்வதேச பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மூன்று நாள்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த இரண்டு பெண்களுக்கு மற்றும்  துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கும்  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com