
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டதாக நடிகர் சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சித்தார்த், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவரின் இணையதள பதிவுகள் மூலம் அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்குவது வழக்கம்.
இதையும் படிக்க | ரெட் ஜெயண்ட்டிலிருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்?
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் தொல்லைக்குள்ளானதாகவும், தன் மீது ஹிந்து திணிக்கப்பட்டதாகவும் பரபரப்பு பதிவை நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:
ஆளே இல்லாத விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் நானும், எனது வயதான பெற்றோர்களும் தொல்லைக்குள்ளானோம்.
ஆங்கிலத்தில் பேச வலியுறுத்திய போது, தொடர்ந்து அவர்கள் எங்களிடம் ஹிந்தியிலேயே பேசினார்கள்.
இந்த செயலை எதிர்த்து பேசியபோது, இந்தியாவில் இப்படிதான் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் பதிவை பகிர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விசாரணை மேற்கொள்ள மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.