நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரெட் ஜெயண்ட்டிலிருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்?

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் வெளியீடுகளில் இனி உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 12:22 pm

DIN

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் வெளியீடுகளில் இனி உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினரிலிருந்து அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அரசியலில் முழு கவனத்தை செலுத்த இருப்பதால் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ படமே கடைசி படம் என்றார்.

அதேநேரம், அமைச்சராக பதவியேற்றதால் இனி ’ரெட் ஜெயண்ட்’ நிறுவனம்  வெளியிடும் படங்களில் ‘உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் வழங்கும்’ என்பதற்கு பதிலாக அவரின் மனைவியும் இந்நிறுவனத்தின் துணை இயக்குநருமான ‘கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வழங்கும்’ என்கிற புதிய பெயர் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்  மூலம் அதிக படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால், கட்சிக்கு களங்கம் ஏற்படலாம் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விரைவில் இந்தப் பெயர் மாற்றம் நிகழும் எனவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.