நீட் தேர்வு ரத்துக்கு திமுக அரசின் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 
நீட் தேர்வு ரத்துக்கு திமுக அரசின் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து, திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

"திமுக ஆட்சி அமையும் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்; இது உறுதி. 8 மாதங்கள் பொறுத்திருங்கள்; விடியல் பிறக்கும்" என்று தேர்தலுக்கு முன் கூறியவர்தான் மு.க.ஸ்டாலின்.

2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்'என்ற பிரச்னையே வந்திருக்காது. 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது திமுக அரசு, நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com