
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவையில் குறிக்கிட்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை நோக்கி வெளியே போக இவ்வளவு பில்டப்பா என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சித்தார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.
இதையும் படிக்க | தமிழக பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல்
இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
மசோதா மீது உறுப்பினர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது எழுந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் அவமானப்படுத்தவில்லை எனக் கூறினார்.
இதையடுத்து, உங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பளிக்கப்படும். உங்கள் வாய்ப்பின்போது பேசுங்கள் என நயினார் நாகேந்திரனை நோக்கி கூறிய அப்பாவு, வெளியே போக இவ்வளவு பில்டப்பா? போவதன்றால் போகலாம், இல்லையென்றால் வரிசையாக பேசுங்கள் எனக் கூறினார்.
இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதா: பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...