
கரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்குச் சென்ற மு.க.ஸ்டாலினுடன், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவரின் அறிவுரையின்படி வீட்டில் இருந்தவாறே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், சென்னை அண்ணா நகர் வீட்டில் இருந்தவாறே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், இன்று வைகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர், சிறிது நேரம் உரையாடிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.