விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்: மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
செய்தியாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலின்
Updated On :22 பிப்ரவரி 2022, 12:23 pm

DIN

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றியும் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு தரப்பட்ட ஒதுக்கீட்டால், சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.

இது திராவிட மாடல் புரட்சி. கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான் இந்த வெற்றி; திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரமாக இதைப் பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.