
தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 60,707 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதில், அதிகபட்சமாக சென்னையில் 119 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 66 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,49,007ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க- உக்ரைன்: தில்லி வந்தடைந்தது 4-வது விமானம்
மற்றொருபுறம் மேலும் 1,209 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 04,611-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,393 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 1 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,003-ஆக அதிகரித்துள்ளது.