
கோப்புப்படம்
தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 5 வயதுக்குள்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளை இலக்கு வைத்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறுகின்றன.
இதையும் படிக்க | உ.பி.யில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடம் போலியோ பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திருவள்ளுவர் சாலையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோ முகாமைத் தொடக்கி வைத்தார். உடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.