
கோப்புப்படம்
பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்தார். அப்போது புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் தின விழாவிலும் பிரதமர் கலந்துகொள்ளவிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை நேற்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகையும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆனால், ஜனவரி 12 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் காணொலி மூலமாக கலந்துகொள்வார் என்று கூறிய அவர், புதுச்சேரியில் ரூ. 490 கோடி மதிப்பில் 10 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மதுரையில் பிரதமர் பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...