அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 
அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?


தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை 10 ஆயிரத்தைத் தாண்டி 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை (9/1/2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.

இதன்படி, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பொதுப் போக்குவரத்தும் இயங்காததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும், காவல் துறையினர் ஆங்காங்கே கடுமையான வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரைப் பகுதிகளில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள சிலர் வந்துள்ளனர். அவர்களை எச்சரித்து காவல் துறையினர் திருப்பு அனுப்பினர்.

எதற்கெல்லாம் அனுமதி?

  • பெட்ரோல், டீசல் நிரப்பு நிலையங்கள், மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், நாளிதழ் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
  • இன்று நடைபெறும் எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுக்குச் செல்வோரின் வசதிக்காக சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அழைப்பு பத்திரிகைகளைக் காண்பிக்க வேண்டும்.
  • திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com