ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த அதிமுக முன்னாள் நிர்வாகி கைது ஏன்?

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த அதிமுக முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி-யை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது
முன்னாள் அமைச்சர் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த அதிமுக முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி-யை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர்  தனது சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு ஆவினில் மேலாளர் பதவி வாங்கித் தருவதற்காக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் தம்பியும், வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய முன்னாள் நிர்வாகியுமான விஜய நல்ல தம்பியிடம் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விருதுநகர் குற்றப்பிரிவு காவலர்கள் விஜயநல்லதம்பியிடம் விசாரணை செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கடந்த 15.11.2021-ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் முத்துப் பாண்டி ஆகியோர் மீது  ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி வரை  மோசடி செய்ததாக  விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு வார பிணையில் முன்னாள் அமைச்சர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இச்சூழலில் ரவீந்திரன் புகாரின் அடிப்படையில் விஜய நல்ல தம்பியை(55), கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளத்தில் தனிப்படை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com