முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மாமல்லபுரம் 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய மாமல்லபுரம் 
வெறிச்சோடிய மாமல்லபுரம் 

காணும் பொங்கல் நாளில் பரபரப்பாக இருக்கும் மாமல்லபுரம், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவின் 3வது நாள் காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் குடும்பத்துடன் கோயில்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர் எனச் சென்று மகிழ்ச்சியாக கொண்டாடி பொழுதை கழிப்பது வழக்கம். 

கரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாக்கள், பண்டிகைகள் வழக்கமான முறையில் கொண்டாடப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என நினைத்த  நிலையில். இந்த ஆண்டும் காணும் பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் முழு ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.  

வழக்கமாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த சுற்றுலா இடங்களை கண்டு களித்தும் கடற்கரையில் விளையாடியும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பார்கள். 

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் காணும் பொங்கல் தினத்தன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காணப்பட்டது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகங்கள், செய்தித்தாள், விநியோக கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் செல்கிறது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில்  சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டும், முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணித்து வாகனசோதனைகளில் ஈடுபட்டு வருவதால் நெடுஞ்சாலை மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றுபவர்களையும் வாகனங்களையும் கண்காணித்து வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com