திருவள்ளூரில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை

திருவள்ளூர் மாவட்டத்தில் 73 ஆவது குடியரசு நாளையொட்டி, கரோனா விதிமுறைகளை பின்பற்றி, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு முதல்வர் பதக்கத்தை வழங்கிய ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்டோர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு முதல்வர் பதக்கத்தை வழங்கிய ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்டோர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 73 ஆவது குடியரசு நாளையொட்டி, கரோனா விதிமுறைகளை பின்பற்றி, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை குடியரசு நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததோடு, காவல் துறையின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து தேசியக் கொடியின் மூவர்ணத்தை குறிப்பிடும் வகையில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது. அதையடுத்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்பட்டோர் நலத் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத் துறை, பேரூராட்சி, கூட்டுறவுத்துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தோர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். 

மேலும், மாவட்டக் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு தமிழக முதல்வரின் குடியரசு நாள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

தற்போதைய நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. 

அதேபோல், சுதந்திரப் போராட்ட தியாகிகளை, அவர்களின் குடியிருப்புகளுக்கு ஆட்சியர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த குடியரசு நாள் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷிணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், கோட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஆணையர் ரவிச்சந்திரன் கொடியேற்றி வைத்தார். பின்னர் கரோனா களப்பணியில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கும், துய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com