விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 73 ஆவது குடியரசு நாளையொட்டி
தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஏற்றி வைத்து புதன்கிழமை மரியாதை செலுத்தினார். பின்னர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சமாதானப் புறாக்களையும் மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
அதைத் தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய 140 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார்.
இதையும் படிக்க | ஈரோட்டில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் கொடியேற்றிவைத்து மரியாதை
பின்னர் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய, மருத்துவத்துறை, வருவாய் துறை சமூக நலத்துறை,வேளாண்துறை உள்ளிட்ட 20 துறைகளைச் சேர்ந்த 77 அலுவலர்களுக்கு நற்சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.
முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர் ஆண்டு பராமரிப்பு மானியம் ரூ.25 ஆயிரம் வீதம் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சிலம்பம், பரதம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.