பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் சற்றுநேரத்தில் விசாரணை

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் சற்றுநேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் சற்றுநேரத்தில் விசாரணை

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் சற்றுநேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இடையே உயர்நீதிமன்ற கட்டுப்பாடுகளுடன் ஜூன் 23ஆம் பொதுக்குழு கூடியது. 23 தீர்மானங்கள் மட்டுமே பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டுமென்று நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்து பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து இபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

அதேபோல், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் 15 நாள்களுக்கு முன்பே வழங்கப்படாமல் திங்கள்கிழமை மாலைதான் வழங்கப்பட்டுள்ளதால், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகின்றது.

இந்த இரண்டு வழக்குகளில் வழங்கப்படவுள்ள தீர்ப்பை தொடர்ந்துதான் அதிமுகவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தொண்டர்களுடையே இந்த வழக்குகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com