ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி வரி கட்டுகிறாரே அது எப்படி?

ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே அது எப்படி என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி வரி கட்டுகிறாரே அது எப்படி?

ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே அது எப்படி என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எண்ணெய் வகைகளின் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதற்கு ‘கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு சமையல் எண்ணெய் வகைகளின் விலை சா்வதேச சந்தையில் டன்னுக்கு 300 டாலா் முதல் 450 டாலா் வரையில் குறைந்துள்ளது. இது, உள்நாட்டு சில்லறை விற்பனை சந்தையில் எதிரொலிக்க சிறிது காலம் பிடிக்கும்’ என இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே -அது எப்படி என காங்கிரஸ் முன்னாள் எம்.பி பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏழை, நடுத்தர மக்களின் அவசிய தேவையான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருள்களுக்கு விலைகள் கூட்டப்பட்டு வரிவிகிதமும் வரைமுறை இல்லாமல் கூட்டப்படுகிறது. 

ஆனால், ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே - அது எப்படி? என பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com