குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: அரசு பேருந்து சிறைபிடிப்பு 

மணப்பாறை அருகே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கோரி கிராம் மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மணப்பாறை அருகே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அருகே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 
மணப்பாறை அருகே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கோரி கிராம் மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் பகுதியில் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருந்த ஆழ்துளை கிணறுகள் பழுதாகி அகற்றப்பட்டு ஊராட்சி நிர்வாகம் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. 

வீட்டிற்கு ஒரு தனி காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டும், அவை பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், ஊராட்சி நிர்வாகம் எந்த கோரிக்கை வைத்தாலும் அதை கண்டுக்கொள்வதில்லை என்றும், ஆழ்த்துளைக் கிணற்றிலிருந்து உவப்பு தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்வதாகவும், அதை அருந்துவதால் உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகக் கூறும் அப்பகுதி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதிக்கு வந்த அரசு நகர பேருந்தை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாகவும், விரைவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதையடுத்து, அரசு பேருந்து விடுவிக்கப்பட்டு மறியல் கைவிடப்பட்டது. 

இருப்பினும் எந்த நிரந்தர தீர்வும் கிடைக்காத விரக்தியில் குடங்களுடன் அப்பகுதிவாசிகள் கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com