
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! @AIADMKOfficial @EPSTamilNadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 11, 2022
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்!