அதிமுக பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து வானரகம் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. 
அதிமுக பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து வானரகம் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. 

அதிமுகவின் பொதுக்குழு விவகாரம் குறித்து ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. ஆனால், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ளது.

அதனால், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவுக்குத் தடை விதிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் திட்டமிட்டபடி பொதுக்குழுவை திங்கள்கிழமை காலை 9.15 மணியளவில் கூட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளர்கள் பெருமளவில் பொதுக்குழு நடைபெறும் வானரகத்தில் கூடியுள்ளனர். 

இந்நிலையில், பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பொதுகுழுவுக்கு எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார். பொதுகுழுவுக்கு வரும் பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து தாமதமாக சென்ற நிலையில், இந்த முறை 9 மணிக்கு முன்னரே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல சற்று முன்னதாக புறப்பட்டுள்ளார்.கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவுக்கு காரில் சென்றவர், தற்போது பிரசார வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

மேலும், ஒற்றைத் தலைமையாக,பொதுச்செயலாளராக இபிஎஸ் வரவேண்டும் என்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள். நிர்வாகிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நடைபெறவுள்ள பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அதன்மூலம் தற்காலிக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தேடுக்கப்படவுள்ளதாகவும், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அவர்களை நீக்க தனித்தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com