சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 10 ,262 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்!

சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 10,262 பேர் நீட் தேர்வு எழுதி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 10 ,262 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்!

சேலம்: சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 10,262 பேர் நீட் தேர்வு எழுதி வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வை 12 மையங்களில் 10,262 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு எழுதுபவர்கள் 1.30 மணிக்குள் உள்ளே வரவேண்டும். அதன் பிறகு வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், இரண்டு மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணிக்கு தேர்வு நிறைவடையும். 
மேலும், தேர்வு எழுத வருபவர்கள் முகக்கவசம், கைகளை கிருமி நாசிக் கொண்டு தூய்மைப்படுத்திய பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நீட் தேர்வுக்காக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வந்த மாணவ,மாணவிகளை தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு நடைபெறும் கட்டடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

தேர்வுகள் அனைத்தும் விடியோ கேமரா பதிவு செய்யப்படுகிறது. அங்காங்கே சிசிடிவி கேமராக்கள் வைத்தும் கண்காணிப்புப் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com