வன்முறை வேண்டாம்: மாணவியின் தாயார் உருக்கம்

வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட இறந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
போராட்டக் களத்தில்...
போராட்டக் களத்தில்...
Published on
Updated on
1 min read


வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட இறந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மர்மான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர். 

போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாணவியின் தாயார் வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட வேண்டும் என்றும், அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புவதாக போராட்டக்கரார்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com