கூத்தாநல்லூர்: பெரியப்பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் வேட்புமனு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
கூத்தாநல்லூர்: பெரியப்பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் வேட்புமனு

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு வக்பு வாரியம் ஆணையிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் சரக வக்பு வாரிய கண்காணிப்பாளரும், தேர்தல் அதிகாரியுமான டிஓபி தாரிக், தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று 19ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, பெரியப்பள்ளி வாயில், பரக்கத்துல்லா ஹாலில் காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.

15 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பெரியப் பள்ளி வாசல் நிர்வாகக் குழுவுக்கு 31 பேர், தஞ்சாவூர் சரக வக்பு வாரிய கண்காணிப்பாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டிஓபி தாரிக் கிடம்,வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்தத் தேர்தலில், பெரியப் பள்ளிவாசலின் நிர்வாகிகளான, தலைவர் என்.எம்.ஏ. சிஹாபுதீன், செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர், ஆர்.ஏ.அப்துல் கரீம், எல்.பீ.மைதீன், கே.ஏ.முகம்மது இஸ்மாயில் உள்ளிட்ட 7 பேர் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

24 பேர் புதியவர்களாக போட்டியிடுகிறார்கள். இதில், நகரின் பிரமுகர்கள் நாட்டாண்மை என அழைக்கக் கூடிய ஹாஜா பகுருதீன், நா.அ. அன்சார்தீன், நகர மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் உள்ளிட்ட 24 பேர் புதிய வேட்பாளர்கள் ஆவார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் பணிகளை வக்பு வாரிய ஆய்வாளர் ம.சாதிக் கவனித்தார். வரும் 21 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 23 ஆம் தேதி, வேட்பு மனு திரும்பப் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 31 ஆம் தேதி, ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாயில் நிர்வாகக் குழு தேர்தலை , கூத்தாநல்லூரைச் சேர்ந்த வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும், பரபரப்பான தேர்தலாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com