அனுமதியின்றி விடுமுறை: 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன் என்று 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
அனுமதியின்றி விடுமுறை: 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

சென்னை: அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன் என்று 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

பள்ளிகள் கொடுக்கும் விளக்கத்தின்  அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை (ஜூலை 18) தொடா் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் 91 சதவீத தனியாா் பள்ளிகள் செயல்பட்டதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்தது.

987 பள்ளிகள் செயல்படவில்லை

தமிழகத்தில் மொத்தமுள்ள 11,335 தனியாா் பள்ளிகளில் 10,348 பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. 38 மாவட்டங்களில் உள்ள 987 தனியாா் பள்ளிகள் இயங்க வில்லை. இந்த விவரத்தின் படி கிட்டத்தட்ட 91 சதவீத பள்ளிகள் வழக்கம் போல இயங்கி உள்ளன. மெட்ரிக் பள்ளிகள் 89 சதவீதம், நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95 சதவீதம், சிபிஎஸ்இ பள்ளிகள் 86 சதவீதம் இயங்கின.

காஞ்சிபுரம், நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் இயங்கின. சென்னையில் 99 சதவீத பள்ளிகள் செயல்பட்டன. குறைந்தபட்சமாக தருமபுரியில் 16 சதவீதம், நாமக்கலில் 32 சதவீத பள்ளிகள் மட்டுமே இயங்கின. கள்ளக்குறிச்சியில் 92 சதவீத பள்ளிகள் திங்கள்கிழமை செயல்பட்டன என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com