
தமிழகத்தின் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
கேரளத்தில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே - 47 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் சேர்ந்தவர்களும் கடத்திலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அதில் சென்னையில் 9 இடங்களும், திருச்சியில் 11 இடங்களும் அடங்கும்.
மேலும், இச்சோதனையில் இதுவரை 57 செல்லிடப்பேசிகளும், 68 சிம்கார்டுகள் மற்றும் சில பாஸ்போர்ட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.