கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கக்கோரிய மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கக்கோரிய மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக கடந்த ஞாயிறன்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதுகுறித்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

மாணவியின் முதல் உடற்கூறாய்வில் சந்தேகம் இருந்ததால் இரண்டாவது முறை உடற்கூறாய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மருத்துவக்குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்றும் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில்,  மறுஉடற்கூறாய்வுக்கு அனுமதி அளித்து உடற்கூறாய்வை விடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மாணவி தரப்பு மருத்துவரை சேர்க்க மறுப்பு தெரிவித்துவிட்டது. 

இதையடுத்து மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், உச்சநீதிமன்றமும் இதற்கு மறுப்பு தெரிவித்து மறு உடற்கூறாய்வுக்கு மட்டும் அனுமதி வழங்கி வழக்கை ஒத்திவைத்தது. 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.ஆர்.ஹவாய் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மாணவியின் உடல் மறுகூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கக்கோரிய மாணவியின் தந்தை தொடர்ந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றும் இந்த வழக்கை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற மாணவியின் தந்தை கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

வேண்டுமென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறிய நீதிபதி, வழக்கை வாபஸ் பெறவில்லை எனில் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறவே, மாணவியின் தந்தை வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com