
செங்கழுநீர் விநாயகர் கோவில் சாமி ஊர்வலம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகையையொட்டி சனிக்கிழமை மாலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மேட்டு தெரு செங்கழுநீர் விநாயகர் கோவில் கோட்டை வாயில் நீதி விநாயகர் கோயில், அண்ணா நகர் ரத்ன விநாயகர் கோவில், கலெக்டர் ஆபீஸ் சக்தி விநாயக கோவில், ஹை ரோடு சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில்,

சின்ன நத்தம் சுந்தர விநாயகர் கோவில் தெரு சந்திர விநாயகர் கோயில், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் ஆடிக்கிருத்தி சனிக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது.