
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 2,000 மருத்துவ மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ மாணவர்கள் உக்ரைன் சென்றனர்.
இதையும் படிக்க- 'அக்னிபத்': மோடி ஆய்வகத்தில் புதிய பரிசோதனை -ராகுல் காந்தி
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் தங்கள் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசின் முடிவால் மருத்துவ மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர்.
மாணவர் நலன் காக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.