புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முா்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முா்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க: குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முா்மு
பதவியேற்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.