ஆடித் திருவிழா: கோட்டை மாரியம்மனுக்கு டன் கணக்கில் வாசனை மலர்களால் பூச்சாட்டுதல்!

சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு டன் கணக்கில் வண்ண வண்ண வாசனை மலர்களால் பூச்சாட்டுதல் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்
அருள்மிகு கோட்டை மாரியம்மன்
அருள்மிகு கோட்டை மாரியம்மன்

சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு டன் கணக்கில் வண்ண வண்ண வாசனை மலர்களால் பூச்சாட்டுதல் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில். மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்திபெற்ற இந்த திருகோயிலில் உள்ள அம்மனை வழிபட்டு சென்றால் வேண்டியதை வேண்டியபடி தருவது கோட்டை மாரியம்மனின் சிறப்பு.

இந்த திருக்கோயில் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு மாட்டங்களுக்கு பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்டுவது இந்த கோட்டை மாரியம்மனை மட்டுமே, பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த திருகோயிலில் ஆடி மாதத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்,  கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா நடத்த இயலவில்லை. இதனிடையே நிகழாண்டு ஆடித் திருவிழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல்  நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆடித் திருவிழா என்பது ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கும். அந்த வகையில் கோட்டை மாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சேலத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் இருந்து பூக்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள அரளி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட ஏராளனமான வாசனை பூக்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் திருக்கோயிலை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு ஜண்டை மேள தாளங்கள் முழங்க அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு டன் கணக்கில் வண்ண வண்ண வாசனை மலர்களால் பூச்சாட்டுதல் வைபவம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருக்கோயில் பூசாரி பூக்களை வாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். சேலம் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் இருந்து  ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். இதனால் பூக்களுக்கு நடுவே அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.  திருவிழா தொங்கும் முன் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுவதால் வேண்டியதை தரும் நாயகியை காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். இந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி முடிந்து அடுத்த வாரத்தில் திருவிழா தொடங்குகிறது.  

அதாவது வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நடைபெறுகிறது. பின்னா் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிராா்த்தனை செலுத்துதல் ஆகியவை ஆக.10, 11, 12 ஆகிய மூன்று நாள்களுக்கு தொடா்ந்து நடைபெறுகிறது. 

அதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி பால்குட விழா, உற்சவா் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகியவையுடன் ஆடித் திருவிழா நிறைவு பெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய அம்மன் திருக்கோயில் கோட்டை மாரியம்மன். ஆடி மாதத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் திருக்கோயில்களில் திருவிழா நடைபெறும். ஆனால், கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடைபெற்ற பின்னர் மற்ற கோயில்களின் நிர்வாகிகள் கோட்டை மாரியம்மனிடம் பூக்களை கொண்டுவந்து அம்மனிடம் காண்பித்த பிறகுதான் மற்ற மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் வைபவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com