ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது: அமைச்சர் மெய்யநாதன்

தமிழ்நாட்டில் மக்களின் கருத்து கேட்காமல் எங்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது: அமைச்சர் மெய்யநாதன்


தமிழ்நாட்டில் மக்களின் கருத்து கேட்காமல் எங்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகாா்பன், கச்சா பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிா்த்து கடந்த 25 ஆண்டுகளாக காவிரி டெல்டா  மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். இதன்பயனாக, கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது . அதன்படி, ஓஎன்ஜிசி புதிய கிணறுகள் அமைக்கவும், ஏற்கெனவே பாதிப்பு ஏற்படும் சூழலில் மூடப்பட்ட கிணறுகளை மீண்டும் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டது.

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், காவிரி டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள ஹைட்ரோ காா்பன் கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுகமாக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக, மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஹைட்ரோ காா்பன் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பெரியகுடி கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பது தொடா்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. 

இதையடுத்து பழைய கிணறு அல்லது புதிய கிணறு மூலம் ஓஎன்ஜிசி ஹெட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என மன்னாா்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே,  மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில், சேந்தமங்கலம்-பெரியகுடி உட்கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் பணிகள் தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 29) நடைபெறவிருந்த பேச்சுவாா்த்தைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடா்பாக, முன் ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகே முடிவு செய்யப்படும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவித்தார். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களின் கருத்து கேட்காமல் எங்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் அருகே பெரியகுடியில் கருத்துக்கேட்பு கூட்டம் ரத்தான நிலையில், தமிழ்நாட்டில் மக்களின் கருத்துக் கேட்காமல் எங்கும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்க மாட்டோம். பழைய கிணறு அல்லது புதிய கிணறு மூலம் ஓன்ஜிசி ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com