
திருடு போன வீடு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட ரூ.10 மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ஞாயிற்றுக்கிழமை காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். ஈராக் நாட்டில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து, கடந்த 23ந் தேதி ஊர் திரும்பி உள்ளார்.
இவர், தனது மனைவி , பிள்ளைகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு , ஞாயிற்றுக்கிழமை அதிககாலை வீடு திரும்பினர்.
போது , வீட்டின் கதவு பூட்டை உடைத்து 4 சவரன் தங்க நகை, 3000 அமெரிக்கா டாலர், ஈராக் நாட்டு 3000 ரியால் , ரூ.40 ஆயிரம் ரொக்கம் என ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து வேதாரண்யம் காவலர் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மேப்ப நாய் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்,