
மதுரையில் பெய்த தொடர் கனமழை காரணமாக மதுரையில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளக்காடாக மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
இந்தநிலையில் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கன மழை காரணமாக கோவில் வளாகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் கோவில் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.

மேலும், சுவாமி சன்னதி கொடி மரம் பகுதி மற்றும் ஆடி வீதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கோவில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர கோவிலைச் சுற்றியுள்ள ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி காணப்படுகிறது. இதனால் நடைபாதை வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.