மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி: பெண் மேலாளர் கைது

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்துள்ள கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கூட்டுறவு வங்கி மேலாளர்  உமாமகேஸ்வரி
கூட்டுறவு வங்கி மேலாளர்  உமாமகேஸ்வரி


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்துள்ள கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (38). அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி 

இது தொடர்பாக கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில்,வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர்கள் போலி ஆவணம் மூலம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி மேலாளர் உமாமகேஸ்வரியை கைது செய்தனர். 

தற்போது அவர் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com