மேட்டூர் அணை
தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,753 கன அடியாக சரிந்தது
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
அணைக்கு வெள்ளிக்கிழமை காலை 7,605 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று சனிக்கிழமை காலை காலை நீா்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 5,753 கனஅடியாகவும் குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை 114.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று சனிக்கிழமை காலை 114.57 அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.07 டி.எம்.சியாக உள்ளது.
இதையும் படிக்க | மருந்துக் கட்டுப்பாடு ஆய்வில் 41 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு!