அதிமுக பொதுக்குழு நடக்காது; பிரச்னைக்கு அந்த 600 பேரே காரணம்: வைத்திலிங்கம்

அதிமுக  பொதுக்குழு கூட்டம் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.
வைத்திலிங்கம் (கோப்புப் படம்)
வைத்திலிங்கம் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read


ஜூலை 11ஆம் தேதி அதிமுக  பொதுக்குழு கூட்டம் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சையில்  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், உறுப்பினர்களாக இல்லாத 600 பேர் பொதுக்குழுவுக்கு வந்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது என விளக்கம் அளித்தார். 

தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பொதுக்குழுவிற்கு பிறகு ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.  பொதுக்கூட்டத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு போகும் முன்பு, 6 மணிக்கே பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லாத 600 பேரை முன்னால் அமர்ந்து விட்டார்கள்.

அவர்கள் தான் கூச்சல் போட்டனர். உறுப்பினர்கள் யாரும் எந்த வார்த்தையும் பேசவில்லை, அவர்கள் கொண்டுவந்த பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லாத ஆட்களால் அந்த நிகழ்வு நடப்பதற்கு காரணம். அவர்கள் பொதுக்குழுவை நடத்தவில்லை, ஒரு கட்சியின் ஜனநாயகத்திற்கு புறம்பாக கண்ணியம், கட்டுப்பாடு, கடமை எதுவும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தினார்கள். 

அவர்கள் நீதிமன்ற அறிவுரை எதுவும் கேட்காமல் தீர்மானம் கொண்டு வந்தனர். அதை எதிர்ப்பதாக  கூறி நாங்கள் வெளிநடப்பு செய்தோம். வருகிற 11ம் தேதி பொதுக்குழு நடக்காது எனக் குறிப்பிட்டார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த  22ஆம் தேதி இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் ஜூன் 23ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. 

கூட்டத்தில் பெரும்பாலானோா் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளராக இருந்தனா். அவா்கள் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்ட அதேநேரம், ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை கடுமையாகத் தொடா்ந்து விமா்சித்து முழக்கமிட்டனா்.

பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் சார்பில் போடப்பட்ட ரோஜா மாலையையும் இபிஎஸ் நிராகரித்தார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால், பொதுக்குழு மிகுந்த பரபரப்புடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது. 

தற்போது பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு உறுப்பினராக இல்லாத, 600 பேரை அரங்கத்தின் முன் வரிசைகளில் அமர வைத்ததே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com