கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

கல்வி மீண்டும் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.  கல்வி மற்றும் சுகாதாரம் மாநில அரசுகளின் கைகளில் இருப்பதே சிறந்தது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவ
கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்: ப.சிதம்பரம்
Published on
Updated on
2 min read


கல்வி மீண்டும் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.  கல்வி மற்றும் சுகாதாரம் மாநில அரசுகளின் கைகளில் இருப்பதே சிறந்தது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அனைத்து இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு  சார்பில், காங்கிரஸ் எக்னாமிக் மாடல் எனும் கருத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா உலககளாவிய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. 1991 -இல் இருந்து இந்தியா பொருளாதாரம் வளர்ந்துள்ளது. 

உத்யபூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொருளாதார கொள்கை தீர்மானமும் அடங்கும். 1991 ஆம் ஆண்டு மார்ச்சில் தெளிவான புதிய பாதை கிடைத்தது.

31 ஆண்டுகளுக்கு பின்னால், நாட்டின் எதிர்பார்ப்பு, மாற்றம் தெளிவாக தெரியும். நாடு அடைந்த நன்மைகள் இந்த பாதையில் தெரியும், நாட்டின் வளம், வளர்ச்சி, தனி நபர் வருமான அதிகரித்தது. 

2004, 2014 இல் இருந்து 4 முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றமடைந்துள்ளது.  3 முதல் 4 ஆண்டுகளில் 7.7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதம் என ஜிடிபி அதிகரித்தது. உலக வங்கியி கணக்கின்படி, சுமார் 230 மில்லியன் ஏழ்மையில் இருந்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். 50 சதவீதம் மக்கள் தொகையினர் 25 வயதுக்கும் கீழ் உள்ள இளைஞர்கள். பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. 

கடந்த 31 ஆண்டு பொருளாதாரம் பற்றிய பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பிராந்தியங்களுக்கு இடைடே வேறுபட்ட பொருளாதாரம் நிலவுகிறது. 

ராணுவம் என்பது திறனை மேம்படுத்தும் திட்டம் கிடையாது. 

அக்னி வீரர்களாக வெளியே வருபவர்கள் மிகச் சிறந்த முடி திருத்துவோர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, துணி துவைப்பவர்களாக மாற போகிறார்கள். 

எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். 


மத்திய அரசில் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், 10 லட்சம் பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். காங்கிரஸின் முக்கிய இலக்கு இதுதான்.  பக்கோடா விற்பதையும், பச்சி பே்ாடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம். 

பசியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 நாடுகளில் 101 ஆவது இடத்தில் உள்ளது. 

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். கல்விக்காக மாணவர்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற முடியும். அதிகாரம் பரவலாக வேண்டும். கல்வி கடனுக்கு ஒவ்வொரு ரூ.100க்கும் ரூ.10 வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தநிலை நீடித்தால் மாணவர்கள் எவ்வாறு கல்வி பெற முடியும். 

தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி அகற்றப்பட வேண்டும். 

அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே அளவீட்டில் குறைந்த தொகையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாகதான் நாங்கள் உருவாக்கினோம். 

தற்போதுள்ள ஜிஎஸ்டி நாங்கள் உருவாக்கிய ஜிஎஸ்டி கிடையாது என்று சிதம்பரம் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com