நமது அம்மா நாளிதழ் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

அதிமுகவின் அதிகாரபூர்வ நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 
ஜூன் 20ஆம் தேதி வெளியான நமது அம்மா நாளிதழ்.
ஜூன் 20ஆம் தேதி வெளியான நமது அம்மா நாளிதழ்.
Published on
Updated on
1 min read

அதிமுகவின் அதிகாரபூர்வ நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் அதிகாரபூர்வ நமது அம்மா நாளிதழின் நிறுவனர்கள் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயர்கள் இதுநாள் வரை குறிப்பிடப்பட்டு வந்தது. நேற்றைய பதிப்பில் கூட இருவரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று வெளியான நமது அம்மா பதிப்பில் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளிதழ் நிறுவனர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலங்களில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த  22ஆம் தேதி இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் ஜூன் 23ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இருப்பினும் இக்கூட்டம் பெரும் சலசலப்புடன் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றது. கூட்டத்தில் பெரும்பாலானோா் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளராக இருந்தனா்.

அவா்கள் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்ட அதேநேரம், ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை கடுமையாகத் தொடா்ந்து விமா்சித்து முழக்கமிட்டனா்.  பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் சார்பில் போடப்பட்ட ரோஜா மாலையையும் இபிஎஸ் நிராகரித்தார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால், பொதுக்குழு மிகுந்த பரபரப்புடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது. இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11-இல் பொதுக்குழு மீண்டும் கூடுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com