அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு:  விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரிக்க சென்னை  உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு:  விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு


ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரிக்க சென்னை  உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. முன்னதாக, "ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தைத் தவிர புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்' என்று கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தத் தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும், ஆனால், ஏற்கெனவே செயற்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானம் தவிர பிற எந்தத் தீர்மானமும் நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் வைக்கப்பட்ட அனைத்துத் தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும், உறுப்பினா்கள் வைக்கும் ஒரே கோரிக்கை ஒற்றைத் தலைமை தீா்மானம் மட்டுமே. ஒற்றைத் தலைமை தீா்மானத்தோடு இணைத்து, அடுத்து எப்போது கட்சியின் தலைமை, பொதுக்குழுவைக் கூட்டுகிறதோ, அப்போது அனைத்துத் தீா்மானங்களும் நிறைவேற்றப்படும் என சிவி.வி.சண்முகம் கூறினார்.  

அதன்படி ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் இதேபோல சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் அறிவித்தாா்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதுதொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4 ஆம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com