
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்டக் குழுவை சேர்ந்த 4 பேர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மல்லப்பனூரில் 10- அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்டக் குழுவை சேர்ந்த 4 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூரை அடுத்த விருதாசம்பட்டியில் மறைந்த முன்னாள் மருத்துவ சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்ட குழுவின் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் செயலாளர் தாஹிர், பொருளாளர் நளினி, மறைந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா இவரின் 4 வயது மகன் பிரித்திவிராஜ் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ஒசூர்: ஜுலை 13,14-ல் 2 ஆயிரம் குறு, சிறு நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
அரசு மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
இதில், அரசாணை 354-ஐ உடனடியாக 2017 முதல் அமல்படுத்தி நிலுவைத் தொகையுடன் செயல்படுத்த வேண்டும், ஆறு ஆண்டுகள் நடத்தப்படாமல் உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் சி.டி.எஸ், ஸ்பெஷாலிட்டிக்கான பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடத்தப்பட வேண்டும், பதவி உயர்வுக்கான அடிப்படை தகுதியாக இரண்டு ஆண்டு கிராமப்புற சேவையை கொண்டு வருதல்,
புதிதாக மருத்துவக் கல்லூரிகளை தொடர்வதற்காக என்.எம்.சி,யில் தாக்கல் செய்துள்ள விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.
டிப்ளமோ முடித்து விட்டு முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு மற்றும் மூன்று படி உயர்வுகள் தரவேண்டும், கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து நிவாரணம் தரப்பட வேண்டும். உயிரிழந்த மருத்துவ விவேகானந்தரின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...